பிரணவ் வெங்கடேஷுக்கு ரூ.20 லட்சம் வழங்கி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில், மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி வாழ்த்தினார். 

நிகழ்வின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேஷ் அவர்களின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top