சென்னையில் மார்ச் 17 முதல் யு-17 டேபிள் டென்னிஸ் போட்டி

சென்னை : இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஆதரவுடன் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி வரும் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இதில் இந்தியா முழுவதிலும் இருந்து தேசிய ரேங்கிங் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 30 வீரர்கள், 30 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் சுவீடன், ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 பேரும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top