டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2026 ’ டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் அல்டிமேட் டேபிள் டென்னிஸ், ஷரத் கமல் அகாடமி மற்றும் ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் AI இணைந்து நடத்துகின்றன.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சித்தலே ஜோடி கொரியாவின் ஓ சியுங்வான், கிம் சியோங்ஜின் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மனுஷ் ஷா, தியா சித்தலே ஜோடி 3-2 (10-12, 11-6, 12-10, 5-11, 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கால் இறுதி சுற்றில் மனுஷ் ஷா, தியா சித்தலே ஜோடி, வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் ஜோடியுடன் மோதுகிறது. பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் ஜோடி தங்களது முதல் சுற்றில் 11-8, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் இஸ்கெண்டர் கார்கி, சர்வினோஸ் மிர்காதிரோவா ஜோடியை தோற்கடித்தது.
மற்ற இந்திய ஜோடிகளான போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஹர்மீத் தேசாய், யஷஸ்வினி கோர்படே மற்றும் அங்கூர் பட்டாச்சார்ஜி, ஸ்வஸ்திகா கோஷ் ஜோடியும் கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
ஹர்மீத் தேசாய், யஷஸ்வினி ஜோடி தங்களது முதல் சுற்றில் 3-0 (11-8, 11-4, 11-7) என்ற செட் கணக்கில் ருமேனியாவின் டேரியஸ் மூவிலினு, ஆண்ட்ரியா டிராகோமன் ஜோடியை வீழ்த்தியது. அதேவேளையில் அங்கூர் பட்டாச்சார்ஜி, ஸ்வஸ்திகா கோஷ் 3-2 (11-9, 3-11, 11-8, 6-11, 11-9) என்ற செட் கணக்கில் கொரியாவின் பார்க் கியூஹியோன், கிம் நயோங் ஜோடியை வென்றது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஜோடி 1-3 (10-12, 11-8, 5-11, 9-11) என்ற செட் கணக்கில் பிரான்சின் ஃபிளேவியன் கோட்டன், திபோ போரே ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 15 வயதான இந்தியாவின் திவ்யான்ஷி பவுமிக் 1-3 (11-6, 6-11, 8-11, 5-11) என்ற செட் கணக்கில் டபிள்யூடிடி ஃபீடர் சீரிஸ் வதோதரா 2026 வெற்றியானரான கொரியாவின் ரியூ ஹன்னாவிடம் தோல்வி அடைந்தார்.


The gaming experience here is top notch. I really appreciate how fast the loading times are. Definitely my new favorite spot, check out bdjoya9gems if you want some real excitement.
Finally found a site that doesn’t crash every five minutes. The loading speeds are top notch and the customer support is very helpful. 119betlogin
This club has such a welcoming atmosphere and the rewards keep coming. It’s my new favorite place to unwind and win. Visit phvip777club for sure.
Finally found a reliable link that doesn’t lag. The loading speed is impressive and the bonuses are actually fair. Love playing on wso288link
Logging in is a breeze and the game loading times are super short. It makes the whole experience so much more enjoyable on pksixgamelogin