குமரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணி சாம்பியன்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி – ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த தெ.தி.இந்து கல்லூரி அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் ராய் வியான்னி 47 ரன்கள் எடுத்தார்.

ஸ்காட் அணி தரப்பில் அருள் ஆல்சன், சகாய பென்னி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 152 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணி 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

அதிகபட்சமாக சஞ்சய் 74 ரன்கள் விளாசினார். வெற்றி பெற்ற அணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார், உடன் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top