எஸ்ஆர்எம் செஸ்: சைலேஷ் சாம்பியன்

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச ஓபன் ஃபிடே ரேட்டிங் செஸ் தொடர் நடைபெற்றது. இந்த போட்டியை கோல்டன் நைட்ஸ் செஸ் அகாடமி மற்றும் மாஸ்டர் மைண்ட் செஸ் அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து எஸ்ஆர்எம் கல்லூரி நடத்தியது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.சைலேஷ் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 446 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில் பரிசுத் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.மேலும் 80 பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

பரிசுகளை SRM IST இன் ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் பெர்னார்ட்ஷா நெப்போலியன் வழங்கினார். இந்திய கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீஹரி, செந்தில் குமார், கோகுல், கணேஷ் பாபு, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top