ஏப்ரல் 6-ம் தேதி குமரி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. 19 வயதிற்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் தேர்வு வரும் 6-ம் தேதி காலை 7 மணி அளவிலும், 16 மற்றும் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேர்வு வரும் 10-ம் தேதி காலை 7 மணி அளவிலும் நடைபெறும்.
19 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.9.2006 அன்றோ அல்லது அதன் பின்னரரோபிறந்திருக்க வேண்டும்.
16 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.9.2009 அன்றோ அல்லது அதன் பின்னரரோ பிறந்திருக்க வேண்டும்.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.9.2011 அன்றோ அல்லது அதன் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஹரிஹரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top