அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் புதிதாக களமிறங்குகிறது கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ்

புதுடெல்லி, ஏப்ரல்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6-ல் புதிய உரிமையாளராக கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணி இணைந்துள்ளது. கூடுதலாக, PBG அணி புனே ஜாகுவார்ஸ் என்ற புதிய பெயரில் களம் இறங்குகிறது. இது உலகத் தரம் வாய்ந்த போட்டியை வழங்குவதோடு, டிடி கோட்டையைக் கொண்ட பிரதேசங்களுக்கு லீக்கின் வரம்பை மேலும் விரிவுபடுத்தும்.

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6 வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) அகமதாபாத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

WhatsApp Image 2025 04 01 at 15.37.21

யுனிகாப்ஸ் குழுமம் மற்றும் எம்விகாஸ் குழுமத்தின் இணை உரிமையாளரான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் யுடிடி சீசன் 6-ல் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. இணை உரிமையாளர்களான கேதன் ஜெயின், ரஜத் குமார் ஆகியோர் விளையாட்டில் நேரடி அனுபவத்தைப் பெற்றவர்கள். முன்னாள் தேசிய அளவிலான வீரர்களளான இவர்கள் டேபிள் டென்னிஸ் பற்றிய ஆழமான வேரூன்றிய புரிதலுடன் உரிமையாளராக இந்த சீசனில் நுழைகின்றனர். அதே வேளையில் புகழ்பெற்ற பயிற்சியாளர் அன்ஷுல் கார்க் அணியயின் இயக்குநராக திரும்புகிறார். இவர் UTT சீசன் 4, 5-ல் அணிகளை திறமையாக கையாண்டவர்.

WhatsApp Image 2025 04 01 at 15.37.20

கொல்கத்தா தண்டர்பிளேட்ஸின் இணை உரிமையாளரான அதிகாரி கேதன் ஜெயின் கூறும்போது,”அல்டிமேட் டேபிள் டென்னிஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். இந்த லீக் டேபிள் டென்னிஸுக்கு புதிய வரையறைகளை அமைத்துள்ளது மற்றும் இந்தியாவில் டேபிள் டென்னிஸ் பன்மடங்கு வளர உதவியது.

கொல்கத்தா ஒரு வலுவான விளையாட்டு கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு விளையாட்டிலும் அற்புதமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் பின்னால் அணிதிரளக்கூடிய வகையிலான வலுவான ஒரு டேபிள் டென்னிஸ் அணியை உருவாக்குவதில் நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளோம் . சீசன் 6-ல் நாங்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுவோம் என்று நம்புகிறோம்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top