அதிக போட்டியில் விளையாடிய ஐபிஎல் மும்மூர்த்திகள்!

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இது வரை நடந்துள்ள 17 சீசனிலும் அதிகமான போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் தோனி, ரோகித், கோஹ்லி டாப் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

இவர்களில் சிஎஸ்கே ‘தல’ தோனி அதிகபட்சமாக 264 போட்டிகளில் விளையாடி முதலிடம் வகிக்கிறார். அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்சின் ஹிட்மேன் ரோகித்தும் (257 போட்டி), 3வது இடத்தில் ஆர்சிபி நட்சத்திரம் கோஹ்லியும் உள்ளனர்.

2022, 2024ல் மும்பை இந்தியன்ஸ் லீக் சுற்றில் பரிதாபமாக பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது ரோகித்துக்கு பின்னடைவை கொடுத்தது.

இந்த சீசனுடன் ஓய்வு… இல்லை அடுத்த சீசனே கடைசி என்று தோனியின் ஐபிஎல் ஓட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பை எல்லாம் தவிடுபொடியாக்கி அவர் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு பக்கம் ரோகித் மீண்டும் நல்ல ஃபார்முக்கு திரும்பியிருக்கிறாஎ. கோஹ்லியின் உடல்தகுதியை பார்க்கும்போது அவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிப்பார் என்றே தோன்றுகிறது.

இதனால் இப்போதைக்கு இந்த ரேஸ் முடிவதற்கான சாத்தியம் கண்ணுக்கெட்டிய சீசன் வரை இல்லை என்றே சொல்லலாம்.இந்த மும்மூர்த்திகள் ஓயும்போது தான் யாருக்கு எந்த இடம் என்பது தெளிவாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top