ஐபிஎல் தொடக்க விழாவில் கலக்கப்போகும் கரண் ஆஜ்லா!

ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் மார்ச் 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது.

பிளேயிங் லெவனை இறுதி செய்வதில் அணி நிர்வாகங்கள் மும்முரமாக இருக்க, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மல்லுக்கட்டும் முதல் லீக் ஆட்டம் ஈடன் கார்டனில் இரவு 7.30க்கு தொடங்கும்.

அதற்கு முன்பாக, வழக்கம்போல வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெற உள்ளது.

அதில் பிரபல ‘ராப்’ பாடகர் கரண் ஆஜ்லா இசை மழை பொழிய உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கலை நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணியில் இருந்தே களைகட்டப் போகிறது. இந்த முறை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள்.

ஐயோ இன்னும் ரெண்டு நாள எப்படியா தள்ளுறது என்று ஆவலைக் கட்டுப்படுத்த முடியாத ரசிகர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top