ஐபிஎல் டி20 திருவிழா! ஆட்டம் இன்று ஆரம்பம்!!

இந்தியன் பிரிமியர் லீக்… எதுக்கு இந்த இழுவ? சரி… சரி நம்ம அபிமான ஐபிஎல் 20 ஓவர் அமர்க்களம்… அதகள அட்டகாசத்தின் 18வது சீசன் இன்னைக்கு (மார்ச் 22) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துல கோலாகலமா தொடங்கப் போவுது.

சரியா 6.00 மணிக்கு தொடக்க விழா ஸ்டார்ட். 68,000 பேர்… ஈடன் தோட்டம் நெரம்பி வழியும்னு சொல்லனுமா? நேர்ல போக முடியாதவங்க டிவிய ஆன் செஞ்சுக்கோங்க. ஷ்ரேயா கோஷல், கரண் ஆஜ்லா பாட… திஷா பதானி, ஷ்ரத்தா கபூர், வருண் தவான் ஆட… அமெரிக்க பாப் குழு ஒன்ரிபப்ளிக் இசை  மழை பொழியப் போறாங்க.

IPL Fans Park 1

இன்னும் சல்மான் கான், ஷாருக் கான், விக்கி கவுஷல், கத்ரினா கைப், பிரியங்கா சோப்ரானு பெரிய பாலிவுட் நட்சத்திர பட்டாளமே ஸ்டேஜ் ஏறப் போறாங்க. ஐபிஎல் ஹிஸ்டரிலேயே மொத தடவயா, போட்டிகள் நடக்கபோற 13 இடத்துலயும் ஒரே சமயத்துல தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காய்ங்க!

இது தவிர திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, காரைக்கால், கொச்சி, பாலக்காடு, கோவா, ஆக்ரா, மைசூரு…இப்படி நாடு முழுக்க பல எடத்துல ராட்சத திரையோட ‘ரசிகர் பூங்கா’ இருக்காம்.

மும்பைல மாதுரி தீக்சித், ஜான்வி கபூர் & கோ, பெங்களூருல கன்னடம்+பாலிவுட் ஸ்டார்ஸ், சென்னைல சர்ப்ரைஸ் பேக்கேஜ் இருக்கு. ராத்திரி 7.30க்கு தொடங்கப் போற ஃபர்ஸ்ட் லீக் ஆட்டத்துல நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமோட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மல்லுக்கட்ட போறாங்க.

அந்தப் பக்கமா மழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருக்குன்னு ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்குறதால ஆட்டம் நமத்துப் போகாம இருக்க அந்த வருண பகவான் கருணை காட்டோனும்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், ஜியோசினிமா, ஹாட்ஸ்டார்    

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top