ஐபிஎல் அதிவேக சதம் 2025ல் ரெக்கார்டு பிரேக்?

ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்ல. டீம்ஸ்லாம் ஒரு பக்கம் அசெம்பிளாகி பயிற்சில எறங்கிட்டாங்க. ரசிகர்கள பத்தி சொல்லவே வேணாம்! இப்பவே மந்திரிச்சுவிட்ட மாதிரிதான் இருக்கு.

இந்த முறை சாம்பியன் யாரு? 6வது தடவையா கோப்பைய அடிக்குமா சிஎஸ்கே… இல்ல மும்பை இந்தியன் முந்திக்குமா? கோஹ்லிக்கு ஃபர்ஸ்ட் டைம் லக் அடிக்குமானு ஏகப்பட்ட கேள்விகள்/எதிர்பார்ப்புகள். அதுக்கு முன்னால, கொஞ்சம் ரிலாக்சாக ஐபிஎல் ரெக்கார்ட்ஸ் பார்க்கலாமா?

ஐபிஎல் ஹிஸ்டரில அதிவேக சதம் அடிச்ச சாதனை நம்ம யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கேல் வசம்தாங்க இருக்கு. மனுஷன் 2013 சீசன்ல 30 பந்துல தெறிக்கவிட்ட ரெக்கார்ட இது வரைக்கும் தொட முடியலங்க. யூசுப் பதான் (37 பந்து, 2010), டேவிட் மில்லர்  (38 பந்து, 2013), டிராவிஸ் ஹெட் (39 பந்து, 2024), வில் ஜாக்ஸ் (41 பந்து, 2024) டாப் 5ல இருக்காங்க.

SKY

2025ல இந்த ரெக்கார்டு பிரேக் ஆகுமா? யாருக்கு அந்த சான்ஸ் இருக்கு… ஜஸ்ட் நியூ பிரடிக்சன்ல டாப் 2 பேர் ஸ்கை & அபிஷேக் ஷர்மா. உங்க சாய்ஸ் யாரு… கமெண்ட்ல சொல்லுங்க. வேற வேற ரெக்கார்ட்ஸ் பத்தி அடுத்தடுத்து பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top