ஐபிஎல் தொடரே வெற்றி மனப்பான்மையை விதைத்தது அடித்துச் சொல்லும் தினேஷ் கார்த்திக்

பெங்களூரு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் பெங்களூருவில்
ஆர்சிபி இன்னோவேஷன் லேப் இந்திய விளையாட்டு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

ஐபிஎல் தொடர்தான் அனைத்து வீரர்களின் மத்தியிலும் வெற்றி மனப்பான்மையை கொண்டுவந்தது. இந்த தொடரின் வாயிலாக நிறைய அணிகள் நிதிப்பலன்களை அடைந்துள்ளனர். அவை உள்கட்டமைப்புகளுக்காக திரும்பி வந்துள்ளது.

உள்கட்டமைப்பு வளரும் போது விளையாட்டும் முன்னேற்றம் அடைகிறது. ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டின் அங்கமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தற்போது ஒரே நேரத்தில் இந்தியா தரப்பில் 3அணிகளை களமிறக்க முடியும். இந்த 3 அணிகளும் வலுவானதாக இருக்கும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top