விராட் கோலி ஓய்வு… சச்சின் உருக்கம் !

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பதிவில், “12 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நீங்கள் செய்த ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. உங்களுடைய மறைந்த தந்தை கட்டி இருந்த ஒரு கயிறை எனக்கு நீங்கள் பரிசாக அளிக்க முன் வந்தீர்கள். அந்தச் செயல் மனதைத் தொடும் விதமாக இருந்தது, அன்றிலிருந்து அது எனக்குள் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது என்னிடம் உங்களுக்கு திருப்பி பரிசளிக்க கயிறு வேறு எதுவும் கிடையாது. ஆனால் உங்கள் மீது நான் எப்போதும் நல்ல அபிமானத்தை வைத்துள்ளேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள், இளைஞர்கள் பலரை கிரிக்கெட் பக்கம் அழைத்து வந்திருக்கிறீர்கள்.

அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையை நீங்கள் கொண்டிருந்தீர்கள். வெறும் ரன்களை மட்டும் அல்லாமல் அதற்கு மேல் பலவற்றையும் இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். புதிய தலைமுறை வீரர்கள், ரசிகர்களை கொண்டு வந்துள்ளீர்கள். உங்களுடைய ஸ்பெஷலான டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top