விராட் கோலி ஓய்வு.. ஜெய் ஷா கூறியது என்ன?

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவரான ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெய் ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், “விராட் கோலியின் சிறப்பான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். டி 20 கிரிக்கெட்டின் எழுச்சியின் போது தூய்மையான வடிவத்தை ஆதரித்ததற்கும், ஒழுக்கம், உடற்தகுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அசாதாரண முன்மாதிரியாக அமைந்ததற்கும் நன்றி. லார்ட்ஸில் உங்கள் உரை அனைத்தையும் கூறியது – நீங்கள் இதயப்பூர்வமாகவும், மன உறுதி மற்றும் பெருமையுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top