விராட் கோலி இந்திய கிரிக்கெட் தூண் !

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிசிசிஐ துணைத் தலைவரான ராஜீக் சுக்லாவும் விராட் கோலியை வாழ்த்தியுள்ளார்.

ராஜீவ் சுக்லா தனது எக்ஸ் வலைதள பதிவில், “நம்பமுடியாத அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. விராட் கோலியின் டெஸ்ட் பயணம் ஒரு சின்னமாக இருந்து வருகிறது. அவர், ஒரு கடுமையான போட்டியாளர், ஊக்கமளிக்கும் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான தூண். டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவை இழக்கிறோம். எனினும் உங்கள் பயணம் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top