டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது !

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிசிசிஐயும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ தனது எக்ஸ் வலைதள பதிவில், “நன்றி விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது, ஆனால் அந்த மரபு என்றென்றும் தொடரும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் போற்றப்படும்” என தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top