மல்யுத்தத்தில் வெண்லகம் வென்றார் சுனில் குமார்

அம்மான்

ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 87 கிலோ கிரகோ ரோமன் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சுனில் குமார், தஜகிஸ்தானின் சுக்ரோப் அப்துல்காயெவுடன் மோதினார். இதில் சுனில் குமார் 10-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதி சுற்றில் சுனில் குமார் 1-3 என்ற கணக்கில் ஈரானின் யாஷின் யாஸ்தியிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சுனில் சுமார், சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்கை வீழ்த்தினார்.

77 கிலோ எடை பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சாகர் தக்ரன் வெற்றி பெற்றார். ஆனால் கால் இறுதி சுற்றில் அவர் 0-10 என்ற கணக்கில் ஜோர்டானின் அம்ரோ சதேவிடம் தோல்வி அடைந்தார். அம்ரோ இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் சாகர் தக்ரன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 63 கிலோ எடை பிரிவில் உமேஷ், 55 கிலோ எடை பிரிவில் நித்தின், 130 கிலோ எடை பிரிவில் பிரேம் ஆகியோர் தகுதி சுற்றிலேயே தோல்வி அடைந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top