உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குதகுதி பெற்றது நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா

பியூனஸ் அயர்ஸ்

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை 48 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதற்கான தகுதி சுற்று போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில் நேற்று முன்தினம் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற அர்ஜெண்டினா – பிரேசில் அணிகள் மோதின.

இதில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அல்வரெஸ் (4-வது நிமிடம்), பெர்னாண்டஸ் (12-வது நிமிடம்), மேக் அலிஸ்டர் (37-வது நிமிடம்), சிமியோன் (71-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பிரேசில் அணி சார்பில் 26-வது நிமிடத்தில் குன்ஹா கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு பிரிவில் அர்ஜெண்டினா 31 புள்ளிகளுடன், ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது.

அந்த அணி 14 ஆட்டங்களில் விளையாடி 10 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 31 புள்ளிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top