மியாமி ஓபனில் ஜாஸ்மின் பவ்லினி சாதனை

மியாமி கார்டன்ஸ்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கார்டனில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவ்லினி, போலந்து வீராங்கனையான மெக்டா லினெட்டை எதிர்த்து விளையாடினார்.

இதில் ஜாஸ்மின் பவ்லினி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தார். இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் வரலாற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஜாஸ்மின் பவ்லினி.

இதற்கு முன்னர் 6 வீராங்கனைகள் விளையாடிய நிலையில் அவர்கள், கால் இறுதி சுற்றை கடந்தது இல்லை. கடைசியாக 2023-ம் ஆண்டு இத்தாலியின் மார்ட்டினா டிரெவிசன் கால் இறுதி சுற்றுடன் வெளியேறி இருந்தார். அரை இறுதி சுற்றில் ஜாஸ்மின் பவ்லினி, பெலாரஸின் அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top