ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஸ்ரீ விருது

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு நாளுக்கு முன்பாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்காக 131 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பத்ம விபூஷண், 13 பேர் பத்ம பூஷண் மற்றும் 113 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. மேலும்  ரோஹித் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றிருந்தது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி கடந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top