ஐசிசி ஆடவருக்கான 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி குறித்த ஓர் பார்வை..
2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் சல்மான் அலி ஆகா தலைமையில் களமிறங்குகிறது. 2024-ம் ஆண்டு தொடரில் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் இந்தியா, அமெரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் மூட்டை கட்டியிருந்தது.
டி 20 தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இம்முறை லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. டி 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ளது. இதில் அந்த அணி 7 முறை தோல்விகளை சந்தித்துள்ளது.
இம்முறை அந்த அணி தனது அனைத்து ஆட்டங்களையும் முற்றிலும் சுழலுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் விளையாடுகிறது. பந்து வீச்சில் நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி பலம் சேர்க்கக்கூடும். அனுபவம் வாய்ந்த பாபர் அஸம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
அணி விவரம்:
சல்மான் ஆகா (கேட்ச்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா நஃபே, முகமது நவாஸ், சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்
மோதல் விவரம்:



The app version is just fantastic. I can play on the go without any glitches. If you prefer mobile gaming, noblejiliapp is a must have.
Such an exciting place to play! I love the thrill of the jackpots and the community vibe is great. My go-to site is ca777game
The app version is a game changer. I can play on the go without any hassle and the loading times are super quick. Give sg7772app a try if you like convenience.