ஐசிசி ஆடவருக்கான 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து அணி குறித்த ஓர் பார்வை..
நெதர்லாந்து அணி 7-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறது. அந்த அணி 2 முறை லீக் சுற்றை கடந்து அடுத்து சுற்றுவரை முன்னேறி இருந்தது. இதில் 2022-ம் ஆண்டு தொடரில் அந்த அணியின் பந்துவீச்சாளர் பாஸ் டி லீட் 13 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்து இருந்தார்.
அதேவேளையில் பேட்டிங்கில் மேக்ஸ் ஓ’டவுட் 242 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இடம் பிடித்திருந்தார். இவர்கள் இருவரும் தற்போதைய நெதர்லாந்து அணியிலும் இடம் பெற்றுள்ளனர். 40 வயதான ரோல்ஃப் வான்டர் மெர்வி தனது அனுபவத்தால் பலம் சேர்க்கக்கூடும்.
அணி விவரம்:
ஸ்காட் எட்வர்ட்ஸ் (c), கொலின் அக்கர்மேன், நோவா க்ரோஸ், பாஸ் டி லீட், ஆர்யன் தட், ஃபிரெட் கிளாசென், கைல் க்ளீன், மைக்கேல் லெவிட், சாக் லயன்-கேஷெட், மேக்ஸ் ஓ’டவுட், லோகன் வான் பீக், டிம்ம் வான் டெர் குக்டன், ரோல்ஃப் வான்டர் மெர்வி, பால் வான் மீகிரன், சாகிப் சுல்ஃபிகர்.
மோதல் விவரம்:



Really impressed with the layout and the variety of options here. It is easy to navigate and the rewards are great. plataformaboxwin is a solid choice for any player.
I finally found a site that actually loads fast. The interface is super clean and getting started was a breeze. Definitely giving hulk123login a try tonight!
Love how quick the payouts are. I didn’t have to wait long to get my winnings. The customer support is also very helpful and responsive. Try ph8jilibet