பாகிஸ்தான் அணிக்கு 2-வது வெற்றி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சாஹிப்ஸாதா 41 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். பாபர் அஸம் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ஷதப் கான் 12 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் சேர்த்தனர்.

அமெரிக்க அணி தரப்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 191 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அமெரிக்க அணிய 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

அதிகபட்சமாக சுபம் ரஞ்சனே 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், ஷாயன் ஜஹான்கிர் 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் தாரிக் 3, ஷதப் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 15ம் தேதி இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top