ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, அயர்லாந்துடன் மோதியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் தலைமையில் விளையாடியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஷ் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் கேமரூன் கிரீன் 11 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்களும், மேட் ரென்ஷா 33 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் சேர்த்தனர்.
ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிஸ் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் விளாசினார். கூப்பர் கானொலி 11, சேவியர் பார்ட்லெட் 11 ரன்கள் சேர்த்தனர். முன்னதாக டிராவிஸ் ஹெட் 6, கிளென் மேக்ஸ்வெல் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அடேர் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணி நேதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோரது பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஜார்ஜ் டாக்ரெல் 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் எல்லிஸ் 3.5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 12 ரன்களை வழங்கி 4விக்கெட்களை வீழ்த்தினார். ஆடம் ஸாம்பா 4 ஓவர்ளை வீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கியது. அந்த அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை (13-ம் தேதி) ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது. அயர்லாந்து அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்திருந்தது


The app is super snappy and doesn’t crash like other platforms I’ve used. Getting my wins out is a breeze here. Love using 99jlbetapp on my phone.
Super easy to navigate and the graphics are top notch. If you love gaming, you should definitely check out harta328game.
Your beautiful essay on the meditative benefits of gardening resonated deeply with me, and I am now finding immense peace and satisfaction in the slow, deliberate process of nurturing my plants from seed to bloom.