சூப்பர் ஜெயண்ட்சை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் முன்னேற்றம்

வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகன் * சூரியகுமார் 4000

மும்பை: ஐபிஎல் 18வது சீசன் 45வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3வது இடத்துக்கு முன்னேறியது.

will jacks mom

வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீச… மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. ரிக்கெல்டன் 58 ரன் (32 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), சூரியகுமார் 54 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), வில் ஜாக்ஸ் 29, கார்பின் போஷ் 20, ரோகித் 12 ரன், திலக் வர்மா 6, கேப்டன் ஹர்திக் 5 ரன்  எடுத்து அவுட்டாகினர்.

நமன் திர் 25*, தீபக் சாஹர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் மயங்க் யாதவ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, இமாலய இலக்குடன் களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 161 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆயுஷ் பதோனி 35 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மிட்செல் மார்ஷ் 34 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), நிகோலஸ் பூரன் 27 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் மில்லர் 24 ரன், ரவி பிஷ்னோய் 13 ரன் எடுக்க, கேப்டன் பன்ட் உள்பட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

மும்பை பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவரில் 22 ரன்னுக்கு 4 விக்கெட், டிரெண்ட் போல்ட் 4 ஓவரில் 20 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். வில் ஜாக்ஸ் 2, கார்பின் போஷ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

ஆல் ரவுண்டராக ஜொலித்த வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6வது இடத்தில் உள்ளது.

Sky

* சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை அதிவிரைவாக எட்டிய வீரர்கள் பட்டியலில் அவர் 3வது இடம் பிடித்துள்ளார். கிறிஸ் கேல், டி வில்லியர்ஸ் இருவரும் தலா 2658 பந்துகளில் 4000 ரன் எடுத்த நிலையில் ஸ்கை 2714 பந்துகளில் இதை சாதித்துள்ளார்.

* ஐபிஎல் போட்டிகளில் 174 விக்கெட் எடுத்துள்ள பும்ரா, மும்பை அணி பவுலர்களில் முதலிடம் பிடித்துள்ளார். லசித் மலிங்கா (170 விக்கெட்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top