ishan_pandya

இஷான், பாண்டியா விளாசலில் இந்தியா வெற்றி

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​திய அணி 93 ரன் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா, நமீபி​யா​வுடன் மோதி​யது. இந்​திய அணி​யில் உடல் நலக்​குறைவு காரண​மாக அபிஷேக் சர்மா களமிறங்​க​வில்​லை.

அவருக்கு பதிலாக சஞ்சு சாம்​சன் களமிறங்​கி​னார். முகமது சிராஜ் நீக்​கப்​பட்டு ஜஸ்​பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டார். முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் இந்​திய அணி 9 விக்கெட்கள் இழப்​புக்கு 209 ரன்​கள் குவித்​தது.

அதிகபட்சமாக இஷான் கிஷன் 24 பந்​துகளில், 6 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் 61 ரன்​களும், ஹர்​திக் பாண்​டியா 28 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும் விளாசினர்.

சஞ்சு சாம்​சன், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 22 ரன்களும், சூர்​யகு​மார் யாதவ் 13 பந்துகளில், 12 ரன்​களும், திலக் வர்மா 21 பந்​துகளில், 3 பவுண்டரி​களு​டன் 25 ரன்​களும், ஷிவம் துபே 16 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 23 ரன்​களும் சேர்த்தனர்.

அக்​சர் படேல் 0, ரிங்கு சிங் 0, அர்​ஷ்தீப் சிங் 2 ரன்​களில் நடையை கட்​டினர். கடைசி 11 பந்​துகளில் இந்​திய அணி 5 விக்​கெட்​களை பறி​கொடுத்த நிலை​யில் 4 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தது

நமீபியா அணி சார்​பில் ஜெரார்டு எராஸ்​மஸ் எராஸ்​மஸ் 4 ஓவர்​களை வீசி 20 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்​தி​னார். பென் ஷிகோங்​கோ, ஜேஜே ஸ்மித், பெர்​னார்ட்​ ஸ்கோல்ட்​ஸ்​ ஆகியோர்​ தலா ஒரு ​விக்கெட் கைப்பற்றினர்.

210 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நமீபியா அணி 18.2 ஓவர்​களில் 116 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக லோரன் ஸ்டீன்​காம்ப் 20, ஜான் ஃப்​ரைலின்க் 22, கேப்​டன் ஜெரார்டு எராஸ்​மஸ் 18, ஜான் நிக்​கோல் லோஃப்​டி-ஈடன் 13, ஜேன் கிரீன் 11 ரன்​கள் சேர்த்​தனர்.

ஜேஜே ஸ்மித் 0, மலான் க்ரூகர் 5, பெர்​னார்ட் ஸ்கோல்ட்ஸ் 4, பென் ஷிகோங்கோ 0 ரன்​களில் நடையை கட்​டினர்.

இந்​திய அணி தரப்​பில் வருண் சக்​ர​வர்த்தி 3, அக்​சர் படேல் 2, ஹர்​திக் பாண்​டியா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். அர்ஷ்தீப் சிங், ஜஸ்​பிரீத் பும்​ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் அமெரிக்​காவை வீழ்த்தியிருந்​தது. இந்த இரு வெற்​றிகளின் மூலம் இந்​திய அணி 4 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதலிடத்​துக்கு முன்னேறியது.

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் இந்​திய அணி​யின் தொடர்ச்​சி​யான 10-வது வெற்​றி​யாக இது அமைந்​தது. ஆட்ட நாயக​னாக ஹர்​திக் பாண்​டியா தேர்​வா​னார். இந்திய அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்​தானுடன் பலப்​பரீட்​சை நடத்துகிறது.

2 thoughts on “இஷான், பாண்டியா விளாசலில் இந்தியா வெற்றி”

  1. Trang web rất uy tín và dễ sử dụng. Tôi rất thích cách họ hỗ trợ khách hàng tận tình. Mọi người nên thử trải nghiệm tại vnshbbet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top