இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகலே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. பவன் ரத்னாயகே 40, கமில் மிஷாரா 36, பதும் நிசங்கா 34, குஷால் மெண்டிஸ் 32, சரித் அசலங்கா 28 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி பேட் செய்த நிலையில் மழை குறுக்கீடு காரணமாக 17 ஓவர்களில் 168 ரன்கள் சேர்க்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் பேன்டன் 54, ஜாஸ் பட்லர் 39, கேப்டன் ஹாரி புரூக் 36, சேம் கரண் 20 ரன்கள் விளாசினர்.
6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.


The promotions are legit and the withdrawal process is straightforward. vnz188 is a solid choice for any player.
Really impressed with the customer support here. They answered my questions in minutes and helped me get started with my first deposit. Great vibes at inyouwin.
Fast deposits and even faster withdrawals, which is exactly what I need. The customer support team is also very responsive. Great job by kcwin.