200 விக்கெட் ரேசில் அஷ்வின், நரைன், புவி!

200 wicket race

கிரிக்கெட் என்றாலே புள்ளி விவரங்களின் சொர்க்கம் எனலாம். போடப்படும் ஒவ்வொரு பந்திலும், அடிக்கப்படும் ஒவ்வொரு ரன்னிலும் ஒரு மைல்கல்/சாதனை வாய்ப்பு காத்திருக்கும். ஒரு பேட்ஸ்மேன் எத்தனை முறை முட்டை போட்டிருக்கிறார் என்ற மோசமான செயல்பாடு கூட இதில் அடக்கம்.

அந்த வகையில் ஐபிஎல் 2025ல்… அடுத்து 200 விக்கெட் மைல்கல்லை எட்டும் வாய்ப்பு அஷ்வின், சுனில் நரைன், புவனேஷ்வர் குமாருக்கு பிரகாசமாக உள்ளது. இவர்களில் புவி 181 விக்கெட்டும், அஷ்வின் மற்றும் நரைன் தலா 180 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

அஷ்வின் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளதால் உள்ளூர் ஆடுகளம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். நைட் ரைடர்ஸ் சுழல் சுனில் நரைன் கடந்த சீசனில் செம ஃபார்மில் இருந்தார். அவருமே விக்கெட் வேட்டையில் டபுள் செஞ்சுரிக்கு குறி வைப்பதால் ரேஸ் சூடு பிடித்திருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் வேகமாகக் களமிறங்கும் புவியும் புலிப் பாய்ச்சலில் சீறுவார் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top