josh buttler

ஜாஸ் பட்லர் கின்னஸ் சாதனை

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் நட்சத்திர விக்கெட் கீப்பர் – பேட்டர் ஜோஸ் பட்லர், மிகவும் உயரமான கேட்ச் பிடித்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததன் மூலம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவரின் சாதனை விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் கெவின் பீட்டர்சன், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் போது ஜோஸ் பட்லரின் சாதனை விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் தரையில் இருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் ட்ரோனில் இருந்து கிரிக்கெட் பந்தப் போட அதனை ஜோஸ் பட்லர் லாவகமாக கேட்ச் பிடித்தார். இது முந்தைய அனைத்து சாதனைகளையும்விட மிகவும் அதிகம். இது தில்லியில் உள்ள உயரமான குதுப்மினாரைவிடவும் மூன்று மடங்கு உயரம்.

அவரின் சாதனை விடியோவைப் பார்த்த ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவரின் அபார திறமையைக் கண்டு பிரமித்துப் போயுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் திமோதி ஷானன்119.86 மீட்டர் உயரத்தில் இருந்து பந்தை கேட்ச் பிடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இதனை ஜோஸ் பட்லர் முறியடித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top