முதல் சுற்றுடன் நடையை கட்டினார் சிந்து

பர்மிங்காம் : புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற 16-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 21-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் கா யூன் கிம்முடன் மோதினார். 61 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-19, 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

PV Sindhu bows out of All England Open 2025 badminton tournament

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி, சீன தைபேவின் யி ஹாங் வெய், நிக்கோல் கோன்சாலஸ் ஷான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-10, 17-21, 24-22 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இநத ஜோடி தங்களது அடுத்த சுற்றில் சீனாவின் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள யான் ஜே ஃபெங், யா சின் வெய் ஜோடியுடன் மோதுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top