ஜூனியர் டென்னிஸ் : தமிழ்நாடு வீராங்கனை மாயா அபார வெற்றி

பெனிகார்லோ : ஸ்பெயினில் நடந்து வரும் ஐடிஎப் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் அபார வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு டென்னிஸ் வீராங்கனை மாயா ரேவதி ராஜேஸ்வரன் (15). கோவையை சேர்ந்த இவர் ஸ்பெயினின் பெனிகார்லோ நகரில் நடக்கும் ஐடிஎப் இளையோர் ஜே200 டென்னிஸ் போட்டியில் அவர் விளையாடி வருகிறார். ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்து வீராங்கனை அன்னா கிமிய்சிக் ((16) உடன் மோதினார்.

அதில் மாயா 7-5, 2-6, 6-3 என்ற செட்களில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2வது சுற்றில் கிரேட் பிரிட்டன் வீராங்கனை ஹோலி ஸ்மார்ட் (15) உடன் மாயா இன்று மோதுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top