ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஜன்னிக் சின்னர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான மேடிசன் கீஸ் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 22-ம் நிலை வீரரான சகநாட்டைச் சேர்ந்த லூசியானோ டார்டெரியை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-1, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
5-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்சோ முசெட்டி, 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். 2 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லாரேன்சே முசெட்டி 6-2, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.
லாரன்சோ முசெட்டி, ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். 8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 3-6, 6-4, 6-3, 0-0 என்ற செட் கணக்கில் 12-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனும் 9-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சகநாட்டைச் சேர்ந்த 6-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். 1 மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.
2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியா டெக், தகுதி நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்லிஷுசுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, 46-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் சின்யுவை எதிர்கொண்டார்.
ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமன்டா அனிசிமோவா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 5-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 21-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.


Super easy to register and start playing. No complicated steps, just pure fun and excitement. Join no1jililogin
Best slot games in the Philippines for sure. The jackpot hits are real and the loading speed is impressive. Try your luck at phjilihot