இது வேறு வகை ரீயூனியன்… மீண்டும் இணைந்த டோனி, ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த காலத்தில் இருந்து முன்னாள் கேப்டன் டோனியும், முன்னணி வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவும் மிகுந்த நட்புடன் பழகி வருகிறார்கள். ஐபிஎல் போட்டிகளிலும் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்தனர்.

2020ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரெய்னா ஓய்வு பெற்றார். ஆனால் டோனி வரும் 22ம் தேதி தொடங்கும் 18வது ஐபிஎல் போட்டியிலும் விளையாடுகிறார். இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் இணைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தின் சகோதரி சாக்‌ஷி மற்றும் அங்கித் சவுத்திரி திருமண விழாவில் டோனி, ரெய்னாவும் கலந்து கொண்டு சந்தித்து கொண்டனர்.

இந்த மணவிழாவில் மும்பை வீரர் பிரித்வி ஷாவும் கலந்து கொண்டு டோனி மற்றும் ரெய்னாவை சந்தித்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சி முகாமில் இருந்து நேரடியாக முசோரிக்கு தனது குடும்பத்துடன் சென்ற டோனி அங்கு திருமணத்தில் கலந்து கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top