உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா விளையாடாததால் ரூ.38 கோடி வருவாய் இழப்பு

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி “கிரிக்கெட்டின் தாயகம்” என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற தவறியதால் டிக்கெட் விற்பனையின் வாயிலாக போட்டி அமைப்பாளர்கள் சுமார் நான்கு மில்லியன் பவுண்டுகள் (ரூ.38 கோடி) வருவாயை இழக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top