ஆண்கள் லீக்கிற்கு இணையாக பெண்களுக்கும் வருகிறது கபடி லீக்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்ற 6வது ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இந்திய மகளிர் கபடி ஈரானை 32-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. இதற்கு முன்பும் 2017ல் இந்த போட்டி ஈரானில் நடைபெற்றது, அப்போது இறுதிப்போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியமகளிர் அணி கோப்பையை வென்றது.

தற்போது கோப்பையை வென்ற மகளிர் அணி நேற்று நாடு திரும்பியது. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை மகளிர் அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ. 67.50 லட்சம் பரிசை ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா,’ எங்கள் பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். ஆண்கள் லீக்கிற்கு இணையாக, பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக, நாங்கள் மகளிர் கபடி லீக் தொடங்குவோம்.

kabbadi

கார்ப்பரேட் துறையினர் ஒரு விளையாட்டை ஏற்றுக்கொள்ளவும், சிறந்த நிதி உதவியை வழங்கவும், விளையாட்டு வீரர்களுக்கு நல்ல பயிற்சியாளர் மற்றும் நல்ல பயிற்சி அளிக்கும் திறந்த அகாடமிகளை வழங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். கபடி உள்ளிட்ட உள்நாட்டு விளையாட்டுகளுக்கு கூட இதை உறுதி செய்ய அரசிடமிருந்து நாங்கள் அனைத்தையும் செய்வோம்’ என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top