அள்ளித் தந்த ஆர்ச்சர்! வேதனையான சாதனை!!

ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 76 ரன்களை வாரி வழங்கியது, ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையாக பதிவானது. 10 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள், 2 ஒய்டு, 1 நோபால் என ஆர்ச்சர் பாரி வள்ளலாக இருந்ததே ராஜஸ்தான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றால் மிகையல்ல. அவர் ஓவருக்கு சராசரியாக 19 ரன் விட்டுக்கொடுத்து ஏமாற்றமளித்தார்.

முன்னதாக குஜராத் வீரர் மோகித் ஷர்மா கடந்த சீசனில் (2024) டெல்லி அணிக்கு எதிராக 4 ஓவரில் 73 ரன் விட்டுக்கொடுத்திருந்தார். அந்த சாதனையை முறியடித்து ஆர்ச்சர் வேதனையில் ஆழ்ந்துள்ளார். காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிக் விளையாடாத அவர், நடப்பு சீசனின் முதல் போட்டியில் இப்படி சொதப்பியது சற்று துரதிர்ஷ்டவசம் என்று தான் சொல்ல  வேண்டும்.

ஹெட் ஒரு ஓவரில் 23 ரன் விளாசினார் என்றால்… இஷான், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரும் தங்கள் பங்குக்கு பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஆர்ச்சர் பந்துவீச்சை தவிடுபொடியாக்கிவிட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top