வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

சென்னை

நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான 41-வது இலவச கோடைகால வாலிபால் பயிற்சியை நடத்தியது. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த முகாம் நேற்று (மே 26-ம் தேதி) நிறைவடைந்தது.

இந்த பயிற்சி முகாம் 2 குரோ ஹெச்ஆர் நிறுவனம், அஜந்தா குரூப், அகர்வால் அறக்கட்டளை, டாஸ், காஸ்கோ ஆகியவறின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜூன் துரை, எஸ்டிஏடி பொது மேலாளார் எல்.சுஜாதா, அகர்வால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வக்கீல் தங்கசிவன், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் இணை செயலாளர் மகேந்திரன், ஓய்வு பெற்ற வருமான வரி உதவி ஆணையர் பாலசந்திரன், காஸ்கோ நிறுவனத்தின் பிராந்திய விற்பனை அதிகாரி முகமது ஹாசன், நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பின் துணைத் தலைவர் நரேந்திர குமார் ஜெயின் மற்றும் நெல்லை பிரண்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் ஜெகதீசன், தினகர், சி.ஸ்ரீகேசவன்,  பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top