பாட்மிண்டனில் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சிங்கப்பூர்

 சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார்.

 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து  21-14, 21-9 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற 5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யு ஃபெயுடன் மோதுகிறார். 

 மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் மாளவிகா பன்சோத்  21-14, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுபானிடா கேட்டோங்கிடமும், பிரியன்ஷு ரஜாவத் 21-14,10-21, 14-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடை நரோகாவிடமும் தோல்வி அடைந்தனர்.

 அன்மோல் ஹார்ப் 11-21, 22-24 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யு ஃபெயிடமும், கிரண் ஜார்ஜ் 19-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யங்கிடமும், சந்தோஷ் ராம்ராஜ் 14-21, 8-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் காவிடமும் வீழ்ந்தனர்.

 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 18-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் செங் ஜிங், ஜாங் சிஹாய் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மற்றொரு இந்திய ஜோடியான அஷித் சூர்யா, அம்ருதா பர்முதேஷ் ஜோடி 11-21, 17-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுசி ஷிமோகாமி சயாகா ஹோபரா ஜோடியிடம் வீழ்ந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top