சிஎஸ்கேவுக்கு எதிராக 10 அரை சதங்கள் விராட் கோலி சாதனை

பெங்களூரு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது.

ஜேக்கப் பெத்தேல் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசிய நிலையில் பதிரனாவின் பந்தில் டெவால்ட் பிரேவிஸின் அற்புதமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசிய நிலையில் சாம் கரண் பந்தில் வெளியேறினார்.

virat 05

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 11 இன்னிங்ஸ்களில் அடித்துள்ள 7-வது அரை சதம் இதுவாகும். அதேவேளையில் சிஎஸ்கேவுக்கு எதிராக இது 10-வது அரை சதமாக அமைந்தது.

இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இதற்கு முன்னர் ஷிகர் தவண், டேவிட் வார்னர், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 9 அரை சதங்கள் அடித்திருந்தனர்.

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பெங்களூரு அணிக்காக அவர், இதுவரை ஒட்டுமொத்தமாக 304 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இந்த வகையில் டி 20-ல் ஓர் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய சாதனை வசமும் விராட் கோலியிடமே உள்ளது.

கிறிஸ் கெயில் 263 (பெங்களூரு) சிக்ஸர்களையும், ரோஹித் சர்மா 262 சிக்ஸர்களையும் (மும்பை), கெய்ரன் பொலார்டு 258 சிக்ஸர்களையும் (மும்பை), எம்.எஸ்.தோனி 258 சிக்ஸர்களையும் (சிஎஸ்கே) பறக்கவிட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top