யுடிடி பைனலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி

அரை இறுதி சுற்றில் 8-7 என்ற கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது

அகமதாபாத்

யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA Arena அரங்கில் நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் க்யூக் இசாக் (சிங்கப்பூர்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின்  கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா 2-1 (7-11, 11-10, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

IndianOil UTT S6 Kanak Jha of Jaipur Patriots celebrating his win

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் மரியா சியாவோ (ஸ்பெயின்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் (நெதர்லாந்து) பலப்பரீட்சை நடத்தினார். இதில் டெல்லி தபாங் அணியின் மரியா சியாவோ 2-1 (6-11,11-6, 11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார். இதனால் இரு அணிகள் இடையிலான மோதல் 3-3 என சமநிலையை எட்டியது.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்தியன் ஞானசேகரன் ஜோடியானது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடியுடன் மோதியது. இதில் தபாங் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்தியன் ஞானசேகரன் ஜோடி 2-1 (8-11, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின்  யஷான்ஷ் மாலிக்குடன் மோதினார். இதில் யஷான்ஷ் மாலிக் 2-1 (11-10, 11-9, 6-11) என்ற கணக்கில் சத்தியனை வீழ்த்தி  அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஆட்டம் 6-6 என சமநிலையை எட்டியது.

வெற்றியை தீர்மானித்த கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் தியா சித்தலே, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டை ஸ்ரீஜா அகுலாவும் (11-9), 2-வது செட்டை தியா சித்தலேவும்(11-6) ஆட்டம் 7-7 என சமநிலையை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. இதில் ஸ்ரீஜா அகுலா 11-9 என வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் அவர் 2-1 (11-6, 6-11, 11-9) என்ற கணக்கில் தியா சித்தலேவை தோற்கடித்தார்.

ஒட்டுமொத்தமாக இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. யுடிடி சீசன் 6-ல் நாளை (ஜூன் 14) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ், யு மும்பா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top