யுடிடி சீசன் 6: சென்னை லயன்ஸ் அணி வீழ்த்தியது கொல்கத்தா

அகமதாபாத்

யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸுடன், ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் மோதியது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின்
அங்கூர் பட்டாசார்ஜி, ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் கிரில் ஜெராசிமென்கோவுடன் (கஜகஸ்தான்) மோதினார். இதில் இந்திய இளம் நட்சத்திர வீரரான அங்கூர் பட்டாசார்ஜி 3:0 (11-4,11-10,11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் செலினா செல்வகுமார், ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகியுடன்(சீனா) மோதினார். இதில் ஃபேன் சிகி 3:0 (11-8, 11-10, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இரு அணிகள் இடையிலான மோதல் 3-3 என சமநிலையை எட்டியது.


3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ் (புயிர்டோ ரிகோ), அங்கூர் பட்டாசார்ஜி ஜோடி ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகி, பயாஸ் ஜெயின் ஜோடியுடன் மோதியது

இதில் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகி, பயாஸ் ஜெயின் ஜோடி 2:1 (11-6, 11-4, 8-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணி 5-4 என முன்னிலை வகித்தது.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் குவாட்டரி அருணா (நைஜீரியா), ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பயாஸ் ஜெயினுடன் மோதினார். இதில் குவாட்டரி அருணா 2:1 (11-3, 8-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனால் இந்த டை 6-6 என சமநிலையை அடைந்தது.

வெற்றியை தீர்மானிக்கும் வகையில் கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ், ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பொய்மண்டி பைஸ்யாவுடன் மோதினார். இதில் அட்ரியானா டயஸ் முதல் செட்டை 11-6 என கைப்பற்றினார். 2-வது செட்டை இந்தியாவின் இளம் நட்சத்திரமான பொய்மண்டி பைஸ்யா 11-7 என கைப்பற்ற ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது.

ஆனால் இதில் தொடக்க முதலிலேயே அதிகம் செலுத்திய அட்ரியானா டயஸ் 11-6 என்ற கணக்கில் இந்த செட்டை தன் வசப்படுத்தினார். முடிவில் அட்ரியானா டயஸ் 2:1 (11-6, 7-11, 11-6) என வெற்றி பெற்றார்.

ஒட்டுமொத்தமாக இந்த மோதலில் அறிமுக அணியான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் நாளை (ஜூன்3) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணி, ஜெய்ப்பூர் பேட்டரியாட்ஸுடன் மோதுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top