திருச்சியை வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ்

சேலம்

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூன் 15) பிற்பகலில் சேலம் எஸ்சிஎப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி சோழாஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் விளாசினார். சுஜாய் 37, முகிலேஷ் 23, ஜபார் ஜமால் 17 ரன்கள் எடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்களையும், டி. நடராஜன், சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துஷார் ரஹேஜா 36 பந்துகளில், 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசினார். பிரதோஷ் ரஞ்சன் பால் 42, முகமது அலி 25 ரன்கள் எடுத்தனர். திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி சார்பில் கே.ஈஸ்வரன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்கள் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்து 4 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேவேளையில் திருச்சி சோழாஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை பெற்றது. அந்த அணி இதுவரை விளையாடி உள்ள 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top