59 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
புதுடெல்லி
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் வரும் மே 27 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் 59 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் ஈட்டி எறிதல் நட்சத்திர வீரரும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா இடம் பெறவில்லை.
நீரஜ் சோப்ரா மே 24-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள நீரஜ் கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து டைமண்ட் லீக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். இதனை கருத்தில் கொண்டே அவர், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றிருந்தார். அந்தத் தொடரில் அவர், தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
குண்டு எறிதலில் தேசிய சாதனையை தன்வசம் வைத்துள்ள தஜிந்தர்பால் சிங் தூர், போல் வால்ட் வீரர் தேவ் குமார் மீனா ஆகியோரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதில் தஜிந்தர் பால், நேற்று முன்தினம் கொச்சியில் நிறைவடைந்த பெடரேஷன் கோப்பையில் 2-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தார். அதேவேளையில் தேவ் குமார் மீனா, இந்திய தடகள சம்மேளனம் நிர்ணயித்த தகுதி நிலையை எட்டவில்லை.
ஆனால் அவினாஷ் சேபிள் (ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), பருல் சவுத்ரி (மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), குல்வீர் சிங் (5,000 மீட்டர், 10,000 மீட்டம் ஓட்டம்) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பெடரேஷன் கோப்பையில் பங்கேற்கவில்லை. எனினும் அவர்கள், இந்திய தடகள சம்மேளனத்தின் அனுமதியுடன் வெளிநாடுகளில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெடரேஷன் கோப்பையில் 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த அனிமேஷ் குஜூர், டிரிப்பிள் ஜம்ப்பில் தனது முந்தைய தேசிய சாதனையை சமன் செய்த பிரவீன் சித்ரவேல் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். பாங்காக்கில் கடைசியாக நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் 3-வது இடம் பிடித்திருந்தது.
இந்திய அணி விவரம்:
ஆடவர்: அனிமேஷ் குஜூர் (200 மீட்டம் ஓட்டம்), அனு குமார், கிருஷன் குமார் (800 மீட்டம் ஓட்டம்), யூனஸ் ஷா (1500 மீட்டம் ஓட்டம்), அவினாஷ் சேபிள் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), குல்வீர் சிங், அபிஷேக் பால் (5000 மீட்டம் ஓட்டம்), குல்வீர் சிங், சவான் பர்வால் (10,000 மீட்டம் ஓட்டம்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபுபக்கர் (டிரிப்பிள் ஜம்ப்), சர்வேஷ் குசாரே (உயரம் தாண்டுதல்), சச்சின் யாதவ், யஸ்வீர் சிங் (ஈட்டி எறிதல்), சமர்தீப் சிங் (குண்டு எறிதல்), தேஜஸ்வின் சங்கர் (டெகத்லான்), செர்வின் செபாஸ்டியன், அமித் (20 கிலோ மீட்டர் நடை பந்தயம்).
4X100 மீட்டர் தொடர் ஓட்டம்: பிரணவ் பிரமோத் கவுரவ், அனிமேஷ் குஜூர், மணிகண்டா ஹோப்லிதார், அமலன் போர்கோஹெய்ன், தமிழரசு, ரகுல் குமார், குர்விந்தர்வீர் சிங்.
4X400 மீட்டர் தொடர் ஓட்டம்: விஷால் டி.கே, ஜெய் குமார், மனு டி.எஸ், ரின்ஸ் ஜோசப், துஷார் மன்னா, சந்தோஷ் குமார், தரம்வீர் சவுத்ரி, மோஹித் குமார்.
மகளிர்: நித்யா கந்தே (200 மீட்டம் ஓட்டம்), ரூபால் சவுத்ரி, வித்யா ராம்ராஜ் (400 மீட்டர் ஓட்டம்), ட்விங்கிள் சவுத்ரி, பூஜா (800 மீட்டர் ஓட்டம்), லில்லி தாஸ், பூஜா (1500 மீட்டம் ஓட்டம்), பருல் சவுத்ரி, அங்கிதா (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சஞ்சீவனி ஜாதவ், பருல் சவுத்ரி (5000 மீட்டம் ஓட்டம்), சஞ்சீவனி ஜாதவ், சீமா (10,000 மீட்டம் ஓட்டம்), ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டம்), ஆர்.வித்யா ராம்ராஜ், அனு (400 மீட்டம் ஓட்டம்), ஷைலி சிங், அன்சி சோஜன் (நீளம் தாண்டுதல்), பூஜா (உயரம் தாண்டுதல்). சீமா (வட்டு எறிதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அக்சரா நந்தினி (ஹெப்டத்லான்).
4X100 மீட்டர் தொடர் ஓட்டம்: நித்யா காந்தே, அபிநயா ராஜராஜன், சினேகா, ஸ்ரபானி நந்தா, தானேஸ்வரி, சுதீக் ஷா.
4X400 மீட்டர் தொடர் ஓட்டம்: ரூபல் சவுத்ரி, சிநேகா, சுபா வெங்கடேசன், ஜிஸ்னா மேத்யூ, குஞ்சா ராஜிதா, சார்ன்.