ரஞ்சி கோப்பையில் தமிழகம் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்கள் சேர்த்தனர். நாராயணன் ஜெகதீசன் 7, வித்யூத் 12, குருசாமி அஜிதேஷ் 0, சோனு யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ராஜகோபால் 54, கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 86 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிந்தது,
நிதிஷ் ராஜகோபால் 54, சாய் கிஷோர் 12, திரிலோக் நாத் 1 ரன்னில் நடையை கட்டினர். ஒடிசா அணி தரப்பில் ராஜேஷ் மொகன்டி, தேபப்பிரதா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். கோவிந்தா பாட்வார் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து விளையாடிய ஒடிசா அணி 51.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அனில் பரிதா 56, சம்பித் பரால் 36 ரன்கள் சேர்த்தனர். தமிழ்நாடு அணி சார்பில் மித வேகப்பந்து வீச்சாளரான சோனு யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். திரிலோக் நாத், வித்யுத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
138 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. நாராயணன் ஜெகதீசன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆதிஷ் 12, வித்யுத் 7 ரன்களுடன் களத்தில் இருநதனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 164 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தமிழ்நாடு அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
