300 -ஐ குறிவைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஹைதராபாத்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்த அணி 6 முறை 200-க்கும் அதிகமான ரன்களை குவித்து மிரட்டியது. இதில் ஐபிஎல் வரலாற்றில் சாதனையாக குவிக்கப்பட்ட 287 ரன்களும் அடங்கும்.

srh SQAUD

இதுதவிர அந்த சீசனில் 277 மற்றும் 266 ரன்களையும் விளாசியிருந்தது. இம்முறையும் ஹைதராபாத் அணி அதிரடி பாணியை தொடரக்கூடும். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நித்திஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன் ஆகியோருடன் தற்போது இஷான் கிஷனும் இணைந்துள்ளார். இந்த நால்வர் கூட்டணி இம்முறை எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். அநேகமாக அந்த அணி இந்த சீசனில் 300 ரன்களுக்கு மேல் குவிப்பதை இலக்காக கொண்டிருக்கலாம்.

வேகப்பந்து வீச்சில் பாட்கம்மின்ஸ், முகமது ஷமி, ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷால் படேல் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், ஆடம் ஸாம்பா நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். ஆல்ரவுண்டராக இலங்கையின் கமிந்து மெண்டிஸும் பலம் சேர்க்கக்கூடும்.

SRH matches

ஹைதராபாத் அணியின் பின்வரிசை பேட்டிங் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. உள்ளூர் வீரர்களில் குறிப்பிட்டு சொல்லும் படியிலான பேட்ஸ்மேன்கள் இல்லை. அனிகேத் சர்மா, அபினவ் மனோகர், சச்சின் பேபி ஆகியோருக்கு அனுபவம் கிடையாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top