volleyball

வாலிபாலில் எஸ்ஆர்எம் கல்லூரி சாம்பியன்

சென்னை

நாகர்கோவிலில் உள்ள அய்யா பவுண்டேஷன் கிளப் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து அசத்தியது.

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி தனது முதல் ஆட்டத்தில் 18-25, 25-17, 25-22 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணியையும், 2-வது ஆட்டத்தில் 25-16, 25-16 என்ற செட் கணக்கில் மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியையும், கடைசி மற்றும் 3-வது லீக் ஆட்டத்தில் 23-25, 25-21, 25-19 என்ற செட் கணக்கில் தெற்கு ரயில்வே அணியையும் வீழ்த்தியது.

தெற்கு ரயில்வே அணிய 2-வது இடத்தையும், மினி ஸ்போர்ட்ஸ் அகாடமி 3-வது இடத்தையும், டாக்டர் சிவந்தி கிளப் 4-வது இடத்தையும் பிடித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top