டி 20-ல் சதம் விளாசி பர்வேஸ் ஹொசைன் சாதனை

ஷார்ஜா

வங்கதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடையிலான முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு (மே 17) ஷார்ஜாவில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பர்வேஸ் ஹொசைன் 53 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னர் தமிம் இக்பால் 60 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பர்வேஸ் புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் சதமடித்த 2-வது வங்கதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

192 ரன் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top