டிராவை நோக்கி இலங்கை டெஸ்ட் போட்டி

காலே

இலங்கை – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடி இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 131.2 ஓவர்களில் 485 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

கமிந்து மெண்டிஸ் 87, தனஞ்ஜெயா டி சில்வா 19, குஷால் மெண்டிஸ் 5, மிலன் ரத்னாயகே 39, திரிந்து ரத்னாயகே 0, அஷிதா பெர்னாண்டோ 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். 10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

ஷத்மான் இஸ்லாம் 76, அனாமுல் ஹக் 4, மொமினுல் ஹக் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 56, முஸ்பிகுர் ரகிம் 22 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. அநேகமாக இந்த போட்டி டிராவில் முடிவடையக்கூடும்.

3 thoughts on “டிராவை நோக்கி இலங்கை டெஸ்ட் போட்டி”

  1. Yo, ACB88bet! Gave it a shot last night. Pretty solid experience, gotta say. The slots were hitting, and I liked the variety of games. Definitely worth checking out if you’re looking for something new. Check them out: acb88bet!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top