எஸ்ஆர்ஹெச் புது பிளான்.. தெறிக்கவிட்ட இஷான் கிஷன்

ஹைதராபாத்

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா வீரர்கள் ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி கழற்றிவிட்டிருந்தது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) ரூ.11.25 கோடிக்கு அவரை வளைத்து போட்டது.

போட்டி தொடக்க இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் ஹைதராபாத் அணி தங்களுக்குள்ளேயே இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடினார்கள். இதில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 23 பந்துகளில் 64 ரன்களை விளாசி மிரளச் செய்தார்.

WhatsApp Image 2025 03 16 at 14.40.28 2
இஷான் கிஷன்

பவர்பிளேவில் சூறாவளியாய் சுழன்றடித்த அவர், மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். அவரது அணி 7.2 ஓவர்களில் 117 ரன்களை குவித்த நிலையில் இஷான் கிஷன், கமிந்து மெண்டிஸ் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து ஐபிஎல் தொடரின் போக்கையே தலைகீழாக மாற்றி இருந்தது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஓபனிங்கில் எதிரணியின் பந்துவீச்சாளர்களின் வயிற்றில் புளியை கரைத்திருந்தனர்.

நடுஓவர்களில் நித்திஷ் குமார் ரெட்டி மிரட்டியிருந்தார். இப்போது இவர்களுக்கு கைகொடுக்க இஷான் கிஷனும் இணைந்துள்ளார். ஆக மொத்தத்தில் எஸ்ஆர்ஹெச் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.. ரெடியா இருங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top