VASPO செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான VASPO செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 122 கல்லூரிகள், 100 பள்ளகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் 7 சுற்றுகளில் 6.5 புள்ளிகளை பெற்ற பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஃபெமில் செல்லதுரையும், பள்ளி சூப்பர் சீனியர் பிரிவில் 6 சுற்றுகளில் 5 புள்ளிகளை பெற்ற கோபாலபுரம் டிஏவி மகளிர் சீனியர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தியா ஜெயினும், பள்ளி சீனியர் பிரிவில் 6 சுற்றுகளில் 6 புள்ளிகள் பெற்ற வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஷன்மதி ஸ்ரீயும் முதலிடத்தைப் பிடித்தனர்.

இவர்களுக்கு யு-10 உலக செஸ் சாம்பியனான ஷர்வானிகா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் மகாதேவ், எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரி முதல்வர் அர்ச்சனா பிரசாத், உடற்கல்வி இயக்குனர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top